சூப்பர்ஹிட் படத்திற்காக எம்.ஜி.ஆர் வாங்கிய சம்பளம்: எவ்வளவு தெரியுமா....!

 

cinema news

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த கதாநாயகர்களில் முக்கியமானவர் எம்.ஜி. ராமசந்திரன். இவர் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது நடித்த திரைப்படம் தான் அன்பே வா.


ஏ.சி.திருலோசந்தர் இயக்கத்தில் உருவான இப்படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்தது. சரோஜா தேவி இப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்திருந்தார். எம்.ஜி. ஆரின் வழக்கமான படங்கள் போல் அன்பே வா அமையவில்லை. சற்று மாறுபட்ட கதையாக தான் இருந்தது.

மேலும் ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த அன்பே வா திரைப்படம் தான், அவர்கள் முதன் முதலில் எடுத்த வண்ணப் படமாகும். இப்படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர் மொத்தம் 72 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.



இந்த நிலையில், 72 நாட்கள் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர் எம்.ஜி.ஆர் ரூ. 3 லட்சம் சம்பளமாக கேட்டுள்ளாராம். அந்த சமயத்தில் அவர் ரூ. 70 ஆயிரம் அல்லது ரூ. 80 ஆயிரம் வரை தன சம்பளம் வாங்கி வந்தார் என திரை வட்டாரத்தில் பேச்சு இருந்ததாக கூறப்படுகிறது.


ஆனால், அன்பே வா படத்தில் நடிக்க அவர் ரூ. 3 லட்சம் கேட்டுள்ளார். இதற்கு மறுபேச்சே இல்லாமல் எம்.ஜி.ஆர் கேட்ட சம்பளத்தை ஏ.வி.எம் நிறுவனம் கொடுத்தார்களாம். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், மேலும் ரூ. 25 ஆயிரம் சம்பளம் கேட்டுள்ளார்.


அப்போது கூட மறுபேச்சு பேசாமல், அவர் கேட்ட ரூ. 25 ஆயிரத்தை ஏ.வி.எம் நிறுவனம் கொடுத்துள்ளது. இதன்மூலம் அன்பே வா படத்தில் நடிக்க நடிகர் எம்.ஜி.ஆர் ரூ. 3.25 லட்சம் சம்பளமாக வாங்கி என தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post