தளபதி 69ல் புதிதாக இணைந்த முக்கிய நடிகை! யார் தெரியுமா....!

 

தளபதி 69ல் புதிதாக இணைந்த முக்கிய நடிகை! யார் தெரியுமா-The new lead actress in Thalapathy 69! Do you know who she is?

 ஜனநாயகன் நடிகர் விஜய்யின் கடைசி படம் ஆகும். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது.


 இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் மேனன், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.


 இந்த நிலையில், ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ மட்டுமின்றி மற்றும் ஒரு நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அவர் வேறு யாருமில்லை பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் தான். ஆம், நடிகை ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.


 இவர் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும். இதற்குமுன் புலி படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post